முன்னா பாயாக மாறிய ரிஷப்பன்ட்! புது ஸ்டைலில் கலக்கல்

இங்கிலாந்து தொடருக்குப் பிறகு குஷியாக இருக்கும் ரிஷப் பன்ட், புது ஸ்டைலுக்கு மாறியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2022, 04:04 PM IST
  • ரிஷப் பன்டின் லேட்டஸ்ட் லுக்
  • மிர்சாப்பூர் முன்னா பாயாக மாறினார்
  • இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
முன்னா பாயாக மாறிய ரிஷப்பன்ட்! புது ஸ்டைலில் கலக்கல்  title=

இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை சமனில் முடித்த கையோடு, ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. சிறப்பாக விளையாடிய ரிஷப் பன்ட் ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும், 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவதற்கும் ஆணிவேராக திகழ்ந்தார். அவரை இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது களமிறங்கிய அவர், ஹர்திக் பாண்டியாவுடன் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

மேலும் படிக்க | CSKவிலிருந்து விலகியதை உறுதி செய்த ஜடேஜா? - இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

இருவரும் சூப்பராக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அடித்தளமிட்டனர். ஹர்திக் பாண்டியா அவுட்டானபோதும், ரிஷப் பன்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவர் பந்துகளை எதிர்கொண்ட விதமும், அதிரடியாக விளையாடியது குறித்தும் கவாஸ்கர், ஜாகீர்கான் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டியுள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற சூழல்களில் ரிஷப் பன்ட் களமிறங்கியபோது சூழலுக்கு ஏற்றார்போல் விளையாடாமல் இருக்கிறார், அதிரடியாக விளையாட வேண்டிய அவசியமில்லை, பொறுமையாக விளையாடி இருக்கலாம் என ரிஷப் பன்ட் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

ஆனால், அந்த விமர்சனங்களுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பதிலடி கொடுத்தார். தன்னுடைய ஆட்டம் இதுதான், அதிரடியாக விளையாடுவது தான் பிடிக்கும் என்பதை வார்த்தையால் சொல்லாமல் பேட்டிங்கில் கூறி, அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவரின் இந்த ஒரே ஆட்டம் ரிஷப் பன்ட் மீதான நம்பிக்கையை கிரிகெட் ரசிகர்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது. தற்போது குஷியாக இருக்கும் அவர் புது ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார். பிரபல தொடரான மிர்சாபூர் வெப்சீரிஸின் நாயகன் முன்னா பாய் எனக் தன்னை குறிப்பிட்டுள்ள அவர், அந்த சீரிஸில் வரும் ‘மிர்சாபூரின் அரியணையில் அமர்பவர் எந்த நேரத்திலும் ஆட்சியை மாற்றலாம் என்ற வசனத்தையும் கேப்சனாக போட்டுள்ளார். 

மேலும் படிக்க | ராகுல் டிராவிட்டை டான்ஸ் ஆட வைத்த ஷிகர் தவான்! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News