ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?

ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் ஆகியோர் இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 30, 2024, 10:06 AM IST
  • வேறு அணிக்கு மாறும் ரோஹித் சர்மா?
  • அடுத்த ஆண்டு மும்பைக்கு விளையாட மாட்டார்.
  • முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து.
ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை? title=

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்து மோசமான தோல்வியை சந்தித்தது. புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மோசமான சில ஆட்டங்களால் படுதோல்வியை சந்தித்தது மும்பை அணி. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின், ரோஹித் ஷர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது சந்தேகம்தான்" தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக மாற்றப்பட்டார்.

மேலும் படிக்க | ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் இரட்டை தலைமை பிரச்சனை உருவானது. இந்த பிரச்சனை சீசன் முழுவதும் தொடர்ந்தது. இதன் காரணமாகவும் மும்பை இந்தியன்ஸ் தோல்விகளை சந்தித்து இருக்கலாம். அடுத்த மாதம் தொடங்க உள்ள டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு ​​ரோஹித் சர்மா தலைமை தாங்க உள்ளார். அதே சமயம் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024ல் ரோஹித் சர்மா 32.07 சராசரி, 150 ஸ்டிரைக்கிங் ரேட்டில் 417 ரன்களை அடித்து இருந்தார். இதில் சென்னைக்கு எதிராக ஒரு சதம் மற்றும் அரை சதம் அடித்து இருந்தார். 

கடந்த சில ஐபிஎல் சீசன்களாக மும்பை அணி மோசமான தோல்விகளை சந்தித்து வந்தது. இதன் காரணமாக தான் மும்பை நிர்வாகம் ஹர்திக்கை கேப்டனாக நியமித்தது. ஆனாலும் அது அணிக்கு எந்த ஒரு பலனையும் கொடுக்கவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் 2025 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியில் பெரிய மாற்றத்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. " மும்பை அணி இஷான் கிஷானை விடுவிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவரை 15 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தனர். எனவே அவர் தக்கவைக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை" என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

அதே போல ரோஹித் சர்மாவும் அடுத்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். "ரோஹித் ஷர்மா மும்பைக்காக விளையாடிய கடைசி சீசன் இது தான். அவர் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை. எனவே மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் ரோஹித் ஷர்மாவை நீங்கள் மீண்டும் பார்க்க மாட்டீர்கள். ஆனால் இது என் புரிதல் மட்டுமே. என்னுடைய கருத்து தவறாக கூட இருக்கலாம், ஆனால் ரோஹித் சர்மா இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பை 2024

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பைக்காக பயிற்சியில் நியூயார்க்கில் உள்ளது. தற்போது ஹர்திக் பாண்டியா, பந்த், துபே, ஜடேஜா போன்ற வீரர்கள் அணியுடன் இணைந்துள்ளனர். இன்னும் விராட் கோலி அணியுடன் இணையவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் க்ளென் மேக்ஸ்வெல்லை குறிவைக்கும் 3 அணிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News