IPL 2022: RCB அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 9, 2021, 01:43 PM IST
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
  • ஆர்.சி.பியின் புதிய தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்
  • மைக் ஹெசனுக்கு பதிலாக சஞ்சய் பங்கர்
IPL 2022: RCB அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்   title=

ஐபிஎல் 2022 போட்டித்தொடருக்கான அணியின் தலைமை பயிற்சியாளரை  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நியமித்தது. சஞ்சய் பங்கர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரை ஐ.பி.எல் லீக்கின் 2022 சீசனுக்கான தலைமை பயிற்சியாளராக நியமிப்பதாக செவ்வாயன்று அறிவித்தது. 

தற்போது அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்தின் மைக் ஹெஸனுக்கு பதிலாக இந்தியாவின் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.  மைக் ஹெசன் கிரிக்கெட் நடவடிக்கைகளின் இயக்குநராக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைந்து பணியாற்றுவார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்ட போட்டிகளில் ஹெசன் கூடுதல் தலைமை பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Also | நாட்டை விட ஐபிஎல்லுக்கு வீரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்... கபில்தேவ்

RCBஇல் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சஞ்சய் பங்கர் அணியில் தனது புதிய பங்கைப் பற்றி பேசினார். "தலைமைப் பயிற்சியாளராக சிறந்த ஐபிஎல் அணி ஒன்றில் சேவை செய்வது எனக்கு மரியாதை மட்டுமல்ல, கிடைத்த சிறந்த வாய்ப்பாக நினைக்கிறேன். இந்திய அணியில் சில விதிவிலக்கான மற்றும் திறமையான கிரிக்கெட்டர்களுடன் பணிபுரிந்தேன். அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.  ஐபிஎல் மெகா ஏலங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சீசனில் நிறைய வேலைகள் காத்திருக்கிறது, ஆனால் நிர்வாகம் மற்றும் துணை ஊழியர்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் நான் உறுதியாக செயல்படுவேன்."

பங்கரின் நியமனம் குறித்து RCB இன் தலைவர் பிரத்மேஷ் மிஸ்ரா இவ்வாறு தெரிவித்தார்: "அணியில் உள்ள திறமைகளை ஆராய்ந்து, அணியை மேம்படுத்தும் விஷயத்தில் ஆர்சிபி உறுதியாக உள்ளது, சஞ்சய் பங்கரை நியமித்தது அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்".

"சஞ்சய் பாங்கர் பேட்டிங் ஆலோசகராக இருந்தார், மேலும் இந்திய கிரிக்கெட் அணியுடன் பணியாற்றிய வீரர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நல்ல அனுபவம் கொண்டவர். அணி,  தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் பங்கரின் தலைமையில் மேலும் திறமையாக செயல்படும் என்று உறுதியாக நம்புகிறோம். கடுமையான போட்டிக்கு இடையில் வலுவான தேர்வு நடைமுறையில் சஞ்சய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது அனுபவத்தை பயன்படுத்தி, அணி முன்னணி அணியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று மிஸ்ரா கூறினார்.

Also Read | ரவி சாஸ்திரி உருக்கமான பேச்சு, கலங்கிய வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News