இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது!
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது.
ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் இன்று நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது.
Innings Break!
116 runs from the Skipper along with a gritty 46 from Shankar guides #TeamIndia to a total of 250 in 50 overs.
Will #TeamIndia defend it? #INDvAUS pic.twitter.com/8mxeCszOZR
— BCCI (@BCCI) March 5, 2019
இந்தியா சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 0(6), சிகர் தவான் 21(29) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கோலி நிதானமாக விளையாடி 116(120) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக விஜய் சங்கர் 46(41) ரன்கள் குவித்தார். எனினும் இவருக்கு பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன் காரணமாக இந்தியா 48.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 250 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்குகிறது.