சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2022 போட்டியில் இலங்கை அணி கோப்பை வென்றது. யாரும் எதிர்பார்க்காத விதமாக பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. அடுத்ததாக ஐசிசி உலக கோப்பை 2022 டி20 போட்டிகள் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் எட்டு அணிகள் ஏற்கனவே சூப்பர் 12 க்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள நான்கு அணிகள் முதல் சுற்றுக்குப் பிறகு முடிவு செய்யப்படும். தகுதிச் சுற்றில் இரு குழுக்களில் இருந்து முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் போட்டியின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும், மீதமுள்ள நான்கு அணிகள் வெளியேற்றப்படும்.
மேலும் படிக்க | மூன்று தொடர்களுக்கான இந்திய அணியின் முழு விவரம்! எந்த எந்த வீரர்கள் இல்லை?
ஏற்கனவே சூப்பர் 12க்கு தகுதி பெற்ற எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை குரூப் 1 இல் இடம் பெற்றுள்ளன; இந்தியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் 2ல் இடம் பெற்றுள்ளன. உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த வார இறுதியில் மற்ற அணிகளும் அறிவிக்க உள்ளன.
தகுதி சுற்று போட்டியில் மற்ற அணிகளை வீழ்த்தினால் மட்டுமே உலக கோப்பைக்கு தகுதி பெரும் இடத்தில் இலங்கை அணி தற்போது உள்ளது. தற்போது ஐசிசி தரவரிசையில் இலங்கை அணி 8வது இடத்தில் உள்ளது. ஆசியக் கோப்பை வெற்றி டி20 உலகக் கோப்பைக்கான அணியை தயார்படுத்த உதவும் என இலங்கை கேப்டன் தசுன் ஷனக தெரிவித்தார்.
Have no words to explain this feeling! Thank you all! #SriLanka #Believe #PAKvSL #AsiaCup2022Final @OfficialSLC #Champions pic.twitter.com/versgXAkFM
— Dasun Shanaka (@dasunshanaka1) September 11, 2022
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ