ICC Women T20I World Cup: இந்தியாவின் தொடர்ச்சியான 3வது வெற்றி, அரையிறுதிப் போட்டி உறுதி

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐ.சி.சி மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில் பெண்கள் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்று அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 27, 2020, 01:13 PM IST
ICC Women T20I World Cup: இந்தியாவின் தொடர்ச்சியான 3வது வெற்றி, அரையிறுதிப் போட்டி உறுதி title=

மெல்போர்ன்: ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் நியூசிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. 

 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், இந்திய பெண்கள் அணி களத்தில் இறங்கியது. தொடக்க வீராங்கனையாக இறங்கிய ஷெபாலி யாதவ் (Shafali Verma) சிறப்பாக ஆடி 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் மற்றும் விக்கெட் கீப்பர் உதவியுடன் இந்தியா 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது.

வெற்றி பெற 134 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க வந்த நியூசிலாந்து அணியால் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் முன்னால் விளையாட முடியவில்லை.

நியூசிலாந்து பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஏற்கனவே முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை இந்தியா பெண்கள் அணி வீழ்த்தியது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்று குரூப் "A" பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது. 2020 ஐ.சி.சி மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கு முதல் அணியாக இந்தியா நுழைந்துள்ளது.

இந்தியா: ஷ்சாஃபாலி வர்மா, தான்யா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெம்மியா ரோட்ரிக்ஸ், ஹரன்பிரீத் கவுர் (கேப்டன்), தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா, வேத கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதக், ராஜேஷ்வா.

நியூசிலாந்து: சோஃபி டெவின் (கேப்டன்), ரேச்சல் பூசாரி (விக்கெட் கீப்பர்), சுசி பேட்ஸ், மேடி கிரீன், கேட்டி மார்ட்டின், எமிலா கெர், ஹேலி ஜென்சன், அனா பேட்டர்சன், லே காஸ்பரெக், லியா தஹுஹு, ரோஸ்மேரி மியர்.

Trending News