ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் இப்போட்டி சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் நேரில் கண்டு ரசிக்கக்கூடிய மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் சவால் என்னவென்றால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் லெவன் அணியில் யாரை சேர்க்கலாம்? யாரை வெளியில் உட்கார வைப்பது என்பதுதான்.
தொடக்க ஜோடி
ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஓப்பனிங் இறங்குவார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல காம்பினேஷன் இருப்பதால், அதில் எந்த மாற்றமும் இருக்காது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இருவருமே ஓப்பனிங் இறங்கி நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் இடத்தில் கோலி
ஒன்டவுன், அதாவது 3வது இடத்தில் கோலி இறங்குவதிலும் மாற்றம் இருக்காது. இந்திய அணிக்குள் கோலி வந்தபிறகு, கடந்த 10 ஆண்டுகளாகவே அவர் மட்டுமே அந்த இடத்தில் விளையாடி வருகிறார். அதனால் அவருடைய இடத்திலும் கேப்டன் ரோகித் சர்மா எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டார்.
மேலும் படிக்க | ஜிம்பாப்வே அதிரடி வெற்றி - சூடுபிடிக்க காத்திருக்கும் சூப்பர் 12 சுற்று!
மிடில் ஆர்டரில் மாற்றம் இருக்காது
மிடில் ஆர்டரில் சூர்ய குமார் யாதவ் இறங்குவார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும்போதுகூட சூர்யகுமார் யாதவ் இப்போது இருக்கும் பார்மை உலக கோப்பை தொடர் முழுவதும் தொடர்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த ரோகித், அவர் அணியின் துருப்பு சீட்டுகளில் ஒன்று என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார். இதனால் அவருடைய இடத்துக்கும் ஆபத்து இருக்காது. 5வது இடதில் ஹர்திக் பாண்டியா. 6வது இடத்தில் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடுவார்கள்
பந்துவீச்சாளர்களில் மாற்றம்
பும்ராவுக்கு பதிலாக அணிக்கு வந்திருக்கும் முகமது ஷமி, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பக்கபலமாக அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் ஆகியோர் விளையாடுவார்கள். சுழற்பந்துவீச்சாளர்களில் ரோகித் யாரை இறக்குவார்? என்பது புதிராக இருக்கிறது. யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அஸ்வின் என மூன்று பேர் இருக்கின்றனர். அவர்களில் ஆல்ரவுண்டரான அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சாஹல் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்காது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார்.
மேலும் படிக்க | T20 World Cup: வெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளிய அயர்லாந்து; உலக கோப்பையில் இருந்து அவுட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ