இந்த 3 காரணங்களால் பாகிஸ்தானை இந்திய அணி வெற்றி பெறும்

ஆசிய கோப்பை 2022 தொடரில் இந்திய அணி, இந்த 3 காரணங்களால் பாகிஸ்தான் அணியை வெற்றி பெறும் என்று கூறலாம்  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 28, 2022, 12:58 PM IST
  • விரைவில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி
  • இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோதல்
இந்த 3 காரணங்களால் பாகிஸ்தானை இந்திய அணி வெற்றி பெறும் title=

ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை இந்தியா எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 14 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் இந்தியா 8-ல் வெற்றியும், பாகிஸ்தான் அணி 5 ஆட்டங்களில் வெற்றியும் பெற்றுள்ளன. ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்பதை இந்த மூன்று பெரிய காரணங்களை அடிப்படையாக கூறலாம்.

இந்தியாவின் ஆக்ரோஷமான பேட்டிங்

ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய பேட்டிங்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரோஹித்தின் கேப்டன்சியில் இந்திய பேட்டிங் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறது. ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் வலுவான தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர். விராட் கோலி மூன்றாவது இடத்தில் இறங்குவார். இவர்கள் அனைவரும் ஒரு சில பந்துகளில் போட்டியின் போக்கை மாற்றுவதில் வல்லவர்கள். அதே நேரத்தில், ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளார். பந்துவீச்சில் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்துகிறார். டிஆர்எஸ் எடுப்பதில் மாஸ்டர் ஆகிவிட்டார்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கிறார். கடந்த ஐபிஎல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து இரண்டிலும் எதிரணி க்கு சிம்ப சொப்பனமாக விளங்கினார். சிறப்பான ஃபார்மிலும் அவர் இருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா பெற்றார். அவரின் இருப்பு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துருப்புச் சீட்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

அனல் பறக்கும் சுழற்பந்து வீச்சு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆடுகளங்கள் எப்போதும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீசும் சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர். ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக பந்துவீசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி பாகிஸ்தான் அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.

மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்

மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News