முழு போட்டியையும் அழித்துவிட்டீர்கள் என்று கோபத்துடன் கத்தி, அம்பயரின் நாற்காலியை டென்னிஸ் ராக்கெட்டால் அடித்த டென்னிஸ் வீரரின் ஸ்வெரேவ்வின் அதிர்ச்சிச் செயல், சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் நிலையில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், மெக்சிகன் ஓபன் பட்டப் போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் தோல்வியடைந்த சில நிமிடங்களில் நடுவரிடம் முறைகேடாக நடந்துக் கொண்டதால், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அகாபுல்கோவில் செவ்வாய்க்கிழமை இரவு லாயிட் கிளாஸ்பூல் மற்றும் ஹாரி ஹெலியோவாரா இணையுடன் ஸ்வெரெவ் மற்றும் மார்செலோ மெலோ மோதிய போட்டியின் முடிவில் இந்த தரமற்ற சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
Alexander Zverev has been THROWN OUT of the Mexican Open for attacking the umpire's chair at the end of his doubles match pic.twitter.com/CWhQ1r6kwj
— Amazon Prime Video Sport (@primevideosport) February 23, 2022
6-2, 4-6, 10-6 என்ற செட் கணக்கில், ஸ்வெரெவ் மற்றும் மார்செலோ மெலோ ஜோடி தோல்வியடைந்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்தது.
ஸ்வெரேவ், அம்பயரின் நாற்காலியை மூன்று முறை அடித்தார், ஒரு கணம் அமர்ந்தார், அதன் பிறகும் ஆத்திரம் தீராத அவர், மீண்டும் எழுந்து நடுவரை நோக்கிக் கத்தினார்,
முழு போட்டியையும் அழித்துவிட்டீர்களே என்று சொல்லி கத்தினார். அம்பயர் கீழே இறங்க முயற்சி செய்தபோது, மீண்டும் தனது ராக்கெட்டால் நாற்காலியில் அடித்தார்.
இதையடுத்து, ஸ்வெரேவ் தன்னை அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் அம்பயர் ஒரு கட்டத்தில் அவரது கால்களை பின்னுக்கு இழுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
மேலும் படிக்க | டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஓய்வு
போட்டி நடந்துக் கொண்டிருக்கும்போது, அம்ப்யர் ஸ்வெரேவுக்கு விதி மீறல் புள்ளியைக் கொடுத்ததுமே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கத்தினார். சற்று நேரத்தில் போட்டியில் தோல்வியும் அடைந்தார். இதனால் ஏற்பட்ட எரிச்சலால், தன்னிலை மறந்து டென்னிஸ் வீரர் நடத்தை விதிகளை மீறினார்.
"செவ்வாய் இரவு நடந்த இரட்டையர் ஆட்டத்திற்குப் பிறகு, அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அகாபுல்கோவில் நடந்த போட்டியில் இருந்து விலகினார்" என்று ஏடிபி ட்விட்டரில் தெரிவித்தது.
Aviso importante @atptour
Due to unsportsmanlike conduct at the conclusion of his doubles match on Tuesday night, Alexander Zverev has been withdrawn from the tournament in Acapulco.
— Abierto Mexicano (@AbiertoTelcel) February 23, 2022
24 வயதான ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், மெக்சிகன் ஓபன் தொடரில் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. ATP இணையதளம், அவரது இரண்டாவது சுற்றில் எதிரணியான பீட்டர் கோஜோவ்சிக்குக்கு வாக்ஓவர் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறது.
அம்பயர் மீதான தாக்குதலைப் பார்த்து, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டதால், ஸ்வெரேவ் தனது சேதமடைந்த ராக்கெட்டை முன் வரிசையில் இருந்த ஒரு குழந்தையிடம் கொடுத்தார்.
முன்னதாக, டேனியல் மெட்வெடேவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பெனாய்ட் பெயரை வீழ்த்தி, தரவரிசையில் தனது நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
26 வயதான ரஷ்ய வீரர் இங்கு பட்டம் வென்றால் ஆடவர் தரவரிசையில் நோவக் ஜோகோவிச்சை முந்தி முதலிடத்தை பிடிக்க முடியும்.
மேலும் படிக்க | டென்னிஸ் பால் to ஐபிஎல் ஜாக்பாட்; பஞ்சாப் நரைனின் சுவாரஸ்ய பின்னணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR