இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. 2வது ஒருநாள் போட்டியில் செய்த தவறுகளை இந்திய அணி திருத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிளேயிங் லெவனில் தேவையில்லாத பிளேயர்களை நீக்கவிட்டு, நல்ல ஃபார்மில் இருக்கும் பிளேயர்களுக்கு மட்டும் கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது.
உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பே, தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி விலகினார். அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், வங்கதேசத்துக்கு உம்ரான் மாலிக் முதல் ஒருநாள் போட்டியில் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெறவில்லை. அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
சிறந்த ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்துவீசினார். அவருடைய பந்துகளை எதிர்கொள்ள நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் உம்ரான் மாலிக் மாறினார். 150 கி.மீ அதிகமான வேகத்தில் பந்துகளை வீசிய அவர், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
மேலும் படிக்க | வாஷிங்டன் சுந்தரை திட்டினாரா ரோஹித் சர்மா? வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ