வைரலான வாமிகாவின் புகைப்படம் - விராட் கோலி வேதனை!

தனது மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியானதால் விராட்கோலி அதிருப்தி அடைந்துள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Jan 24, 2022, 12:55 PM IST
  • கடந்த வருடம் ஜனவரி மாதம் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவருக்கும் பெண்குழந்தை பிறந்தது,
  • விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து எங்கு வெளியே வந்தாலும் வாமிகாவின் முகத்தை மூடியே சென்றனர்.
வைரலான வாமிகாவின் புகைப்படம் - விராட் கோலி வேதனை!  title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா விற்கும் 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.  கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவருக்கும் பெண்குழந்தை பிறந்தது, அதற்கு வாமிகா என்று பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்தனர்.  வாமிகா பிறந்த பொழுதே விராட் கோலி (Virat Kohli) மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டனர், அதில் நாங்கள் வாமிகாவின் புகைப்படத்தை அவளது அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம், அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம், எனவே யாரும் வாமிகாவின் புகைப்படத்தை எப்பொழுதும் வெளியிட வேண்டாம் என்று தெரிவித்திருந்தனர். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

ALSO READ | விராட் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டாமா? ரசிகர்களின் கோரிக்கையும் வைரல்

அதன்பிறகு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா (Anuska Sharma) இணைந்து எங்கு வெளியே வந்தாலும் வாமிகாவின் முகத்தை மூடியே சென்றனர்.  முடிந்தவரை வாமிகாவின் புகைப்படத்தை வெளிவராமல் பார்த்துக் கொண்டனர்.  இந்நிலையில் நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தார். அப்பொழுது அனுஷ்கா சர்மா தனது மகள் வாமிகாவுடன் பால்கனியிலிருந்து விராட் கோலிக்கு கையசைத்தார். இது தொலைக்காட்சி கேமராவில் பதிவாகி, பின்பு இணையம் முழுவதும் வைரலானது. 

vamika

நேற்றே விராட்டின் ரசிகர்கள் வாமிக்காவின் புகைபடத்தை அனைவரும் நீக்குங்கள் என்று பதிவிட்டு இருந்தனர், இருப்பினும் சில ஊடகங்களிலும் இந்த புகைப்படம் ஒளிபரப்பானது.  இந்நிலையில் இது குறித்து விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.  நேற்று வாமிகாவின் புகைப்படம் எங்களுக்கு தெரியாமலேயே வெளியாகி அதிகமாக ஷேர் ஆகி உள்ளது. நாங்கள் முன்பு அறிவித்தது போல வாமிகாவின் முகத்தை வெளியே தெரியாமல் பார்த்து வருகிறோம், இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.  மேலும் வாமிகாவின் புகைப்படத்தை பகிராமல் இருந்திருந்தால் நன்றி என்றும் தெரிவித்திருந்தார். 

Anushka Sharma and Virat Kohli Daughter Vamika Viral Photo: Anushka Sharma  issues statement after daughter's first photos go viral; says 'We would  appreciate if Vamika's images are not published'

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. 

ALSO READ | 3வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News