புதுடெல்லி: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முடிந்துவிட்ட நிலையில், விராட் கோலி IPL 2021 இல் தன் திறமையைக் காட்ட உற்சாகமாக உள்ளார். ஆனால் இந்த மெகா டி 20 லீக்கிற்கு முன்னர் அவர் மும்பை சென்றார்.
வீட்டிற்கு திரும்பிய மகிழ்ச்சியில் கோலி
விராட் கோலி (Virat Kohli) புனேவில் உள்ள தனது பயோ பபிளிலிருந்து வெளியே வந்து மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். தான் வீடு வந்த மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில், அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். தனது வீட்டு பால்கனியில் அமர்ந்தபடி அவர் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதில் அவர் ‘வீடு போல எதுவும் இல்லை' என்று எழுதியுள்ளார்.
ஏப்ரல் 9 முதல் தொடங்குகிறது IPL 2021
IPL 2021 ஏப்ரல் 9 முதல் தொடங்குகிறது. தொடரின் தொடக்க ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான RCB ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும். தொடக்க ஆட்டம் சென்னையில் உள்ள சேபாக் மைதானத்தில் நடைபெறும்.
ALSO READ: Ind vs Eng: இந்தியா-இங்கிலாந்து ODI தொடரில் புதிய சாதனை
ஏப்ரல் 1 ஆம் தேதி RCB முகாமில் சேருவார் கோலி
RCB அணித் தலைவர் விராட் கோலி ஏப்ரல் 1 முதல் தன்னுடைய அணியுடன் பயிற்சியில் ஈடுபடுவார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அணி வீரர்கள் சென்னையில் தங்களது பயிற்சியைத் தொடங்குவார்கள். அணியின் பல வீரர்கள் ஏற்கனவே அங்கு வந்துள்ளனர்.
கோலி ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்
கிரிக் இன்ஃபோவின் அறிக்கையின்படி, கோலி ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும். பின்னர் தான் அவர் பயோ பபிளில் செல்வார் என்று நம்பப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முடிவில், கோலி புனேவில் பயோ பபிளை விட்டு வெளியேறினார். ஜனவரி பிற்பகுதியில் இருந்து அவர் பயோ பபிளில் இருந்தார்.
பயோ பபிள் என்றால் என்ன?
கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு அணியின் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு ஒரு சிறப்பு பகுதி உருவாக்கப்படுகிறது. இது 'பயோ பபிள்' என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் எந்த வெளி நபருடனும் தொடர்பு இருக்காது.
பயோ பபிளில் இருப்பது கடினம்
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பின்னர் போட்டிகளின் அட்டவணையைப் பற்றி கேள்வி எழுப்பிய விராட் கோலி, பயோ பபிளில் விளையாடுவது கடினம் என்பதால் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், எதிர்காலத்தில் அட்டவணைகல் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கோலி தெரிவித்தார்.
டீம் இந்தியாவின் பிஸியான அட்டவணை
இந்திய அணி (Team India) சமீப காலங்களில் தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களில் ஆடி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் 2020 க்குப் பிறகு, டீம் இந்தியா ஆஸ்திரேலியா சென்று அனைத்து வடிவங்களிலும் தொடர்களில் விளையாடியது. அதன் பிறகு, நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது.
ALSO READ: IPL PLAYER: ஐ.பி.எல் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டிய வீரர் யார்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR