சொந்த ஊரில் இந்திய அணிக்கு விருந்து வைத்த தல எம்.எஸ். தோனி

எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் இந்திய அணிக்கு விருந்து அளித்துள்ளனர்

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 7, 2019, 08:01 PM IST
சொந்த ஊரில் இந்திய அணிக்கு விருந்து வைத்த தல எம்.எஸ். தோனி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3_வது ஒருநாள் போட்டி நாளை ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள JSCA ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்ப்பதற்க்காக ராஞ்சி சென்றுள்ள இந்திய அணி பயிற்ச்சி செய்து வருகிறது. மேலும் மூன்றாவது போட்டி நடைபெறும் ராஞ்சி, முன்னால் கேப்டனும், தற்போதைய இந்திய அணியின் விக்கெட் கீப்பருமான எம்.எஸ். தோனியின் சொந்த ஊர் ஆகும். 

எம்.எஸ். தோனி சொந்த ஊரில் விளையாட உள்ளதால் உள்ளூர் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை ஆட்டம் மதியம் தொடங்க உள்ளது. பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும்.

இந்தநிலையில், எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் இந்திய அணிக்கு விருந்து அளித்துள்ளனர். இதுக்குறித்து இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

 

 

 

 

ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், நாளை 3_வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள JSCA ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News