விராட் கோலியை ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து தானாக விலக சொல்லி பிசிசிஐ வற்புறுத்தியது என்றும், அவர் பதவி விலகாததால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி ரோஹித் சர்மாவை புதிய ஒருநாள் அணியின் கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டிகள் தொடங்கும் சமயத்தில் டி20 கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். இது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
ALSO | தோனியின் நஷ்ட ஈடு வழக்கு: நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
தற்போது இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 தொடரில் விளையாட தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதற்கான டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி செயல்படுவார் என்று அறிவித்த பிசிசிஐ, ஒருநாள் மற்றும் டி20 தொடரின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவை அறிவித்தது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கோலி தலைமையில் இந்திய அணி பெரிதாக எந்த கோப்பையையும் வெற்றி பெறாததால் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையில் வெற்றி பெற வேண்டி தற்போது கேப்டனை மாற்றியதாக கூறப்படுகிறது.
தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் அனைத்து வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக பொறுப்பேற்றார் கோலி. தனது ஆக்ரோஷமான கேப்டன்சியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக 95 போட்டிகளில் விளையாடி அதில் 65 போட்டிகளில் வெற்றியும் 27 போட்டிகளில் தோல்வியையும் பெற்று உள்ளார். தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து கோலி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று சிறிது காலம் ஒருநாள் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO | டெஸ்ட்க்கு கோலி, ODIக்கு ரோஹித் - இந்திய அணி அறிவிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR