இந்தியாவையும் ஒரு கை பார்ப்போம் - எச்சரிக்கும் பங்களாதேஷ் அணி

இந்தியாவை வெல்வது எளிதல்ல, ஆனால் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம் என பங்களாதேஷ் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jun 25, 2019, 02:42 PM IST
இந்தியாவையும் ஒரு கை பார்ப்போம் - எச்சரிக்கும் பங்களாதேஷ் அணி

சவுத்தாம்ப்டன்: இந்தியாவைத் தோற்கடிக்கும் திறன் பங்களாதேஷுக்கு இருப்பதாக, அந்த அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

2019 உலகக்கோப்பை தொடரில் பல சாதனைகளை செய்து வருகிறது பங்களாதேஷ் அணி. அதுவும் முதல் ஆட்டத்திலேயே தென் ஆப்பிரிக்கா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. மற்றொரு வலுவான அணியான மேற்கிந்திய தீவுகள் அணியையும் வீழ்தியது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப்-அல்-ஹசன் 5 விக்கெட்டை எடுத்து, உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணி பந்து வீச்சாளர்களில் முதன் முறையாக ஐந்து விக்கெட்டை எடுத்தட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து ரன் குவிப்பில் அசத்தி வரும் ஷாகிப்-அல்-ஹசன் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் என 476 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த தொடரில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் வலம் வருகிறார்.

இப்போது பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்தியாவை (ஜூலை 2), பாகிஸ்தானையும் (ஜூலை 5) வீழ்த்த வேண்டும். 

இதுக்குறித்து ஷாகிப் கூறுகையில், "இந்தியா ஒரு சிறந்த அணி மற்றும் உலகக்கோப்பை வெல்லுவதற்க்கான தகுதி உள்ள அணியாக இருக்கிறது. இந்தியாவை வெல்வது எளிதல்ல, ஆனால் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம். எங்கள் அனுபவம் எங்களுக்கு உதவும். இந்திய அணிக்கு கடுமையான போட்டியாளர்களாக இருப்போம்" எனக் கூறியுள்ளார்.

மேலும் “ எங்களுடான போட்டியை வெல்லக்கூடிய உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். ஆனாலும் நாங்கள் இந்திய அணியை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் எனவும் கூறினார்.