தமிழகத்தில் சதமடித்த கோடை வெயில்-மக்கள் அவதி!!

கோடையின் தொடக்கத்திலேயே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது!

Last Updated : Apr 23, 2018, 08:11 AM IST
தமிழகத்தில் சதமடித்த கோடை வெயில்-மக்கள் அவதி!! title=

கோடையின் தொடக்கத்திலேயே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 15ஆம்தேதி 96 டிகிரியாக அடித்த வெயில், நேற்று முன்தினம் 98 டிகிரியை தொட்டது. 
பின்பு படிப்படியாக உயர்ந்து, நேற்று 105 டிகிரி வெயில் டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

கடும் வெயில் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

மார்ச் மாதத்திலேயே வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால் இன்னும் 2 மாதங்கள் எப்படி வெயிலை சமாளிக்க போகிறோம் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 வரையிலான 24 மணிநேரத்தில் திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கரூர் மாவட்டம் பரமத்தி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. 
நாமக்கல், சேலம், வேலூரில் 103 டிகிரியும், தருமபுரி, மதுரையில் 102 டிகிரியும் வெப்பம் பதிவாகியது. மேலும், சென்னை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் 100 டிகிரியும் வெயில் பதிவானது. 

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரியாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News