CBI பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் ‘missing’: 45 கோடி ரூபாய் தங்கம் எங்கே போனது?

காணாமல் போன தங்கம் 400.5 கிலோ எடையுள்ள பொன் மற்றும் ஆபரணங்களின் ஒரு பகுதியாகும். இந்த தங்கத்தை 2012 அம் ஆண்டு சென்னையில் சுரானா கார்பரேஷனில் நடத்திய சோதனையின் போது CBI கைப்பற்றியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2020, 12:31 PM IST
  • CBI பாதுகாப்பின் கீழ் இருந்த தங்கம் காணாமல் போனது.
  • CB-CID-யின் கீழ் இது குறித்த விசாரணை நடக்கும்.
  • லாக்கரின் வைக்கப்பட்டிருந்த தங்கத்தை காணவில்லை.
CBI பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் ‘missing’: 45 கோடி ரூபாய் தங்கம் எங்கே போனது? title=

சென்னை: சிபிஐ நடத்திய சோதனையில் பிடிபட்ட, சுமார் 45 கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோவுக்கும் அதிகமான தங்கம் காணாமல் போயுள்ளது. ஒரு சோதனையில் CBI-ஆல் கைப்பற்றப்பட்ட இந்த தங்கம் CBI-யின் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தங்கம் இப்போது காணாமல் போயுள்ளது என தெரிய வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (Madras High Court) இது குறித்து தமிழகத்தின் சிபி-சிஐடி மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டபோது இது பற்றிய செய்தி வெளிவந்தது.

காணாமல் போன தங்கம் 400.5 கிலோ எடையுள்ள பொன் மற்றும் ஆபரணங்களின் ஒரு பகுதியாகும். இந்த தங்கத்தை 2012 அம் ஆண்டு சென்னையில் சுரானா கார்பரேஷனில் நடத்திய சோதனையின் போது CBI கைப்பற்றியது. இந்த தங்கம் CBI-யின் பூட்டு போடப்பட்ட முத்திரையின் கீழ், சூரானாவின் லாக்கர்களின் வைக்கப்பட்டது.

CBI வழக்குகளுக்கான சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், தங்கம் வைக்கப்பட்ட லாக்கர்களின் 72 சாவிகளை ஒப்படைத்ததாக CBI கூறியுள்ளது. தங்கம் கைப்பற்றப்பட்ட போது, ​​தங்கக் கம்பிகள் அனைத்தையும் ஒன்றாக எடைபோட்டதாக சிபிஐ கூறியது. ஆனால் சூரானாவுக்கும் SBI-க்கும் இடையிலான கடன்களைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட லிக்விடேட்டரிடம் ஒப்படைக்கும்போது, ​​அவை தனித்தனியாக எடைபோடப்பட்டன. அதுவே முரண்பாட்டிற்கு காரணம் என்றும் CBI கூறியுள்ளது.

ALSO READ: Gold Smuggling in TN coast: ₹4.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம் பறிமுதல்

CBI-யின் இந்த கூற்றை ஏற்க மறுத்த நீதிபதி பிரகாஷ், எஸ்.பி. தரவரிசையில் உள்ள ஒரு சிபி-சிஐடி (CB-CID) அதிகாரி, இந்த வழக்கு விசாரணையை எடுத்து நடத்தி, ஆறு மாதங்களில் இதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உள்ளூர் காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டால் அதன் கௌரவம் குறைந்துவிடும் என்று CBI நீதிபதி பிரகாஷிடம் கூறியது.

இதற்கு பதிலளித்த நீதிபதி பிரகாஷ், “சட்டம் அத்தகைய அனுமானத்தை அனுமதிக்காது. அனைத்து போலீஸ்காரர்களும் நம்பகமானவர்கள் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். CBI-க்கு தனி கொம்புகள் முளைத்திருப்பதாகவும் உள்ளூர் காவல்துறை வெறும் வால் போன்றது என்றும் யாரும் கூற முடியாது. அனைவரும் சட்டத்திற்கு முன்பு ஒன்றே.” என்று கூறினார். 

ALSO READ: PMK Protest: 14-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News