Coronavirus! தமிழகம் முழுவதும் 1086 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்...

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 1086 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 9, 2020, 06:36 AM IST
Coronavirus! தமிழகம் முழுவதும் 1086 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்... title=

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 1086 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில உருவாகி உலகளவில் சுமார் 104 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனா தவிர்த்து இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இந்த கொடூர வைரஸுக்கு இதுவரை 3000-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். தற்போது வரை இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக மக்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே நாட்டினுள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் கடந்த 28-ஆம் தேதி ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பபட்டுவருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு கத்தார் வழியாக வந்த இந்திய சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சிறுவன் மற்றும் அவரது தந்தையை பலத்த பாதுகாப்புடன் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறுவனின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் குழந்தை சாமி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, ராஜிவ் காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி, சென்னை மாநகராட்சி மாநகர மருத்துவ அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர்., "ஓமன் நாட்டில் இருந்து இந்தியா வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவருடன் வந்த 27 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது."

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது, சிறுவனின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு பின்னரே அவருக்கு கொரோனா உள்ளதா இல்லையா என தெரியவரும். தற்போது வரை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 68 ரத்த மாதிரிகளில் 55 மாதிரிகளுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீதம் உள்ள மாதிரிகளுக்கு முடிவு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஏற்கனவே 2 பேர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று மதியம் நேபாளத்தில்  இருந்து வந்த ரயில்வே ஊழியர் ஓம் பகதூர் என்பவர் கொரோனா வைரஸ்  அறிகுறியுடன் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காள அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் கிண்டியில் உள்ள ரத்தப் பரிசோதனை மையத்துக்கு  அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு  மாற்றப்படுவார் எனவும் கூறப்படுகிறது. 

Trending News