தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை ராணுவத்தால் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளனர்!!

Last Updated : Feb 21, 2019, 09:29 AM IST
தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை ராணுவத்தால் கைது!  title=

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளனர்!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்றிரவு இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 9 பேர், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 9 பேரையும், அவர்களது படகுகளுடன் கைது செய்தனர். அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளது. ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மண்டபம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News