திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது முதல் அரசு நிர்வாகத்தில் உயர் பொருப்புகளில் நேர்மையான அதிகாரிகளுக்கு பொறுப்புகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறை சார்ந்த உயர் பொறுப்புக்களிலும் இதே முறையில் அதிகாரிகளை நியமிக்கப்பட்டார்கள் இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பேசுபொருளாகவும் ஆனது. திமுக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் போதே அதுவும் அக்கட்சியின் தலைவர் மற்றும் முதல்வராக காவல்துறையை அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலும் கொலை குற்றச்சாட்டில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டதும் கூட ஆச்சரியமாய் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் திமுக பிரமுகர் ஒருவர் தனக்கு அரசு ஒப்பந்தப்பணிகள் வழங்க கமிஷன் கேட்பதாக நீதி கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி இவர் திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்ததுடன் ஆலங்குடி நகர திமுக செயலாளராக இரண்டு முறை இருந்திருக்கிறார். இவரது மனைவி குமுதவள்ளி பொதுக்குழு உறுப்பினராகவும் 1996 முதல் 2001 வரை பேரூராட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார்.
தற்போது அரசு ஒப்பந்தப்பணிகளை செய்து வரும் அவர் தன்னக்கு ஒப்பந்தப்பணிகளை வழங்க 15% கமிஷன் கேட்பதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அந்த கடிதம் தற்போது வெளியாகி கட்சியினரிடையே பரபரப்பை கிளப்பியிருக்கிறது அந்த கடிதத்தில் கட்சியில் தான் பல்வேறு பொறுப்புகளில் இருந்ததாகவும் தற்போது அரசு ஒப்பந்தப்பணிகளுக்கு டெண்டர் எடுத்தால் தற்போது உள்ள பேரூர் கழக செயலாளர் தன்னிடம் 15% கமிஷன் கேட்பதாகவும் தர்வில்லை என்றால் ஒப்பந்தப்பணி வழங்க முடியாது என கூறுவதாகவும். நீண்ட காலமாக கட்சியில் இருக்கும் தனக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் கட்சி எப்படி வளரும் எனவும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறியுள்ளார். இக்கடித விவகாரம் புதுக்கோட்டை திமுக கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ALSO READ கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வேண்டும் - ஓபிஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR