துறைமுகத்தில் 2 சரக்கு கப்பல்கள் மோதல்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இன்று இரண்டு கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.  எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

Last Updated : Jan 28, 2017, 12:24 PM IST
துறைமுகத்தில் 2 சரக்கு கப்பல்கள் மோதல் title=

சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இன்று இரண்டு கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.  எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

எண்ணெய் ஏற்றி வந்த கப்பலுடன் மற்றொரு கப்பல் மோதி உள்ளது. இரண்டு கப்பல்களும் துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கப்பல்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் தொடர் ரோந்து செய்து கப்பல்களின் நிலை கண்காணிக்கப்பட்டது. இந்த விபத்து இன்று காலை சுமார் 4 மணி அளவில் நடை பெற்றது. 

இந்நிலையில், துறைமுகத்தில் கப்பல்கள் மோதியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி அறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடலின் சூழலை பாதிக்கும் வகையில் எண்ணைய் கசிவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News