கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு முடிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளை எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக மூன்று இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-
www.tnresults.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் பிளஸ்-2 முடிவுகளை பார்க்கலாம்.
தேர்வு முடிவுகள் வெளியான பத்து நிமிடங்களுக்குள் மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்படும்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும், தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதினர்.
மேலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும்.