2020-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. (Tamil Nadu Public Service Commission) வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடும் மாதங்களை ஆண்டுத்திட்ட அறிக்கையான டி.என்.பி.எஸ்.சி. முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருக்கிறது. இதன்படி வருகிற 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. (Tamil Nadu Public Service Commission) வெளியிட்டுள்ளது.
டி.எஸ்.பி.எஸ்.சி. (Tamil Nadu Public Service Commission) குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும். இதே மாதத்தில் வேளாண் அலுவலர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.
நூலகர் காலிப்பணியிடம் மற்றும் மீன்வளத் துறையில் ஆய்வாளர், கல்லூரி கல்வித்துறையில் நிதி காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதமும், ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகள், கூட்டுறவு தணிக்கைத்துறை உதவி இயக்குனர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதமும் வெளியாகும்.
ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி மாதம்
அறிவிக்கப்படும்.
குரூப்-2 பிரிவுக்குள் தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படுகிறது. மேலும் செயல் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான குரூப்-8ஏ, பி ஆகியவற்றுக்கு ஜூலையிலும், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பதவியிடத்துக்கு ஆகஸ்டு மாதத்திலும் தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது.
இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற பதவிகளுக்கான குரூப்-4 தேர்வுகளுக்கு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்வார்கள். இந்த ஆண்டில் 6 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு சுமார் 14 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
வனத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கான குரூப்-4 தேர்வுகள் அட்டவணை அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
என டி.என்.பி.எஸ்.சி. (Tamil Nadu Public Service Commission) அறிவுறுத்தி உள்ளது.