வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி!

வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி தொடங்கியது. இன்று முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 3, 2023, 09:27 PM IST
  • உருது மொழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • கல்லூரி வளாகம் வரை மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்.
  • இந்தியாவின் 8 மாநிலங்களில் உருது இரண்டாவது மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி! title=

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.  நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு உருது மொழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு புறப்பட்டு கல்லூரி வளாகம் வரை மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்.

நிகழ்ச்சிக்கு தேசிய உருதுமொழி ஆணையத்தின் இயக்குனர் ஷேக் அகில் அஹமத் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி.வேந்தர் ஜி.விஸ்வநாதன், கே.ஹெச். குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மலக் முஹம்மத் ஹாஷிம்,வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து  பேசினர்.

அப்போது வி.ஐ.டி வேந்தர் பேசியதாவது : -

10 முதல் 12 நாடுகளில் உருது பேசும் மக்கள் உள்ளன. 23 கோடி பேர் உருது பேசுகின்றனர். 7100 மொழிகள் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. அதில் உலகத்தில் உருது பத்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் 8 மாநிலங்களில் உருது இரண்டாவது மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் முதல் மொழியாக உருது உள்ளது. இந்தியாவில் 22 மொழிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் உறுதி மொழியும் ஒன்று.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கண்காட்சி இன்று முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும். வரும் 7 ஆம் தேதி பெண்கள் மட்டும் இக்கண்காட்சியில் கலந்துக் கொள்வார்கள். கண்காட்சி நடைபெறும் நாட்களில் பேச்சுபோட்டி, கவியரங்கம், புத்தக ஆசிரியர்கள் சந்திப்பு, புத்தக வெளியீட்டு விழா, உருது நாடக நிகழ்ச்சி, கவிதை போட்டி, அறிவியல் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் படிக்க | ஒரே நாளில் இவ்வளவு புக்கிங்கா? புத்தாண்டில் OYO-வில் குவிந்த கூட்டம்!

இக்கண்காட்சியில் 55 சிறந்த உருது புத்தக பதிப்பாளர்கள் தங்களது புத்தங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தவுள்ளனர். 95 புத்தக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமய நூல்கள் உருது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் படேல் முஹம்மத் யூசுப், அஜ்மல் சயீத், வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் பொது செயலாளர் கனி முஹம்மத்  அஜ்ஹர், கல்லூரி பேராசிரியர், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம், மத்திய அரசு தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News