தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்வு...

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 2,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.... தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 50,074 ஆக உயர்வு..!

Updated: Jun 30, 2020, 07:25 PM IST
தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்வு...

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 2,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.... தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 50,074 ஆக உயர்வு..!

தமிழகத்தில் இன்று மேலும் 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதில், 3856 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 87 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 3,943 பேரில் சென்னையில் மட்டும் 2,393 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 58,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Image

தமிழகத்தில் 90 ஆய்வகங்கள் (அரசு - 47 மற்றும் தனியார் - 43) உள்ளன. அதில், இன்று மட்டும் 30,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 11 லட்சத்து 70 ஆயிரத்து 683 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,378 பேர் ஆண்கள், 1,565 பேர் பெண்கள். மொத்தத்தில் கொரோனா பாதித்த, ஆண்களின் எண்ணிக்கை 55,502 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 34,644 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது.\

READ | மேற்குவங்கத்தில் ஜூன் 2021 வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: மம்தா

இன்று மட்டும் 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில், மொத்தம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 50,074 ஆக உள்ளது. அதில், 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 4,437 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 74,967 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10,763 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். அதில், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,201 ஆக அதிகரித்துள்ளது.