சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், நண்பர்கள் கட்டாயம் ஆதார் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கர்நாடக மாநிலத்தில் சிறைகளில் உள்ள கைதிகளை பார்க்க வருபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும் என்று கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார, பல்லாரி, மைசூரு, மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர்களுக்கு அவர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
சிறையில் உள்ள கைதிகளை காணவரும் உறவினர்கள், நண்பர்களின் ஆதார் அட்டை வாங்கி அதன் எண்ணை வருகை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் பார்க்க வருவோர் இனிமேல் ஆதார் அட்டை கண்டிப்பாக எடுத்துவரவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.