அப்துல்கலாம் நினைவு நாள்: வெண்கல சிலை திறக்கப்பட்டது.

Last Updated : Jul 27, 2016, 12:25 PM IST
அப்துல்கலாம் நினைவு நாள்: வெண்கல சிலை திறக்கப்பட்டது. title=

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலா மாண்டு நினைவு நாளில் அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. மேலும் அறிவுசார் மையம், மணிமண்டபம் ஆகியவை அமைப்பதற் கான அடிக்கல் நாட்டப் பட்டது.

இன்று அப்துல்கலாமின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி காலை முதலே அங்கு ஏராளமா மக்கள் திரண்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபீல், மணிகண்டன் மற்றும் மாவட்ட கலெக்டர் நடராஜன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோரம் வந்தனர். 

அவர்கள் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு சிலை திறப்பு விழா நடைபெற்றது. மத்திய மந்திரிகள் வெங்கையாநாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் சிலையை திறந்து வைத்தனர். தொடர்ந்து அருங் காட்சியகம், மணி மண்டபம், அறிவுசார் மையம் போன்றவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான கல்வெட்டை மத்திய மந்திரிகள் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், பரமக்குடி எம்.எல்.ஏ. முத்தையா, முன்னாள் சேர் மன் கீர்த்திகாமுனியசாமி,  தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி, அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக் காயர்,  பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

Trending News