பிரதமரை அவதூறாக சித்தரிக்கும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிஜேபி

இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த யூ-டியூப் பக்கத்தை முடக்க வலியுறுத்தி பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2021, 02:30 PM IST
பிரதமரை அவதூறாக சித்தரிக்கும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிஜேபி  title=

BJP சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் பா.ஜ.க வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை அவதூறாக சித்தரித்து மார்ஃப் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை பரப்பும் யூ-டியூப் சேனல்கள் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால் கனகராஜ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பின்னால் இருந்து கட்டியணைப்பதுபோல் ஒரு புகைப்படத்தை கடந்த 6 ஆம் தேதி Modern Times என்ற யூ-டியூப் நிறுவனம் வெளியிட்டு வைரலாக்கியுள்ளதாக தெரிவித்தார். இச்செயல் அவர்களின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்களின் பின்னால் இருக்கும் யாருடைய தூண்டலின் பேரில் செய்யப்பட்டுள்ளதாக தோன்றுகிறது எனவும் அவர் கூறினார். மேலும், அவர்கள் வெளியிட்ட அந்த புகைப்படத்தின் கீழ் பா.ஜ.க உருவாக்கிய "பேட்டி படாவ், பேட்டி பச்சாவ்" திட்டத்தினை கொச்சைப்படுத்தும் விதமாகவும், பா.ஜ.க தலைவர்களை கற்பழிப்பாளர்கள் என குறிப்பிட்டும் வகையிலும் பல்வேறு கமெண்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ALSO READ மதுரையில் பாலம் கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

அதுமட்டுமல்லாமல் பா.ஜ.க-வின் சிறப்பான ஆட்சியை குலைக்கும் வகையிலும், மக்கள் மனதில் பா.ஜ.க குறித்தும், பா.ஜ.க-வின் தலைவர்கள் குறித்தும் தவறான எண்ணத்தை விதைக்கும் வகையிலும் இச்செயல்பாடு உள்ளது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய பிரதமரையும், மத்திய அமைச்சரையும் இவ்வாறு தவறாக சித்தரித்த யூடியூப் சேனல் மீது குற்றவியல் நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், Modern Times என்ற அந்த யூ-டியூப் பக்கத்தை முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கபப்டும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News