ஓ.பி. ரவீந்திரநாத் எப்போது அதிமுக எம்.பியாக இருந்தார்?... கேள்வி எழுப்பிய ராஜன் செல்லப்பா

ஓ.பி. ரவீந்திரநாத் அதிமுக எம்.பியாக இருந்தபோதே சுயேச்சை எம்.பி போல்தான் செயல்பட்டாரென்று அதிமுகவைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 1, 2022, 06:56 PM IST
  • அதிமுகவிலிருந்து ஓபிஆர் நீக்கப்பட்டார்
  • இதனால் அக்கட்சியின் எம்.பி எண்ணிக்கை பூஜ்ஜியமானது
  • அவர் சுயேச்சை எம்.பி என ராஜன் செல்லப்பா விளக்கம்
ஓ.பி. ரவீந்திரநாத் எப்போது அதிமுக எம்.பியாக இருந்தார்?... கேள்வி எழுப்பிய ராஜன் செல்லப்பா title=

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பதவியேற்ற பிறகு அக்கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டுவருகிறது. அதிமுக கட்சியிலிருந்து ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், அவரது மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேபோல், கட்சிக் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக முன்னாள் எம்எல்ஏ திண்டுக்கல் சுப்புரத்தினம், அம்மா பேரவை துணைச் செயலாளர் மாறன், இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன், வலசை மஞ்சுளா, வேலூர் சுரேஷ் பாபு,திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர் உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்குவதாகவும் அறிவித்தார்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் கட்சி பணியாற்ற வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையே அதிமுகவுக்கு இருந்த ஒரே ஒரு எம்.பியாக ஓ.பி. ரவீந்திரநாத்தும் நீக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமானது.

Ravindranath

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக செயல்படுகிறது. அதை நீதிமன்றத்திலும், காவல் நிலையத்திலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக மக்களும் அதே தான் சொல்கிறார்கள். எடப்பாடியின் தலைமை கீழ் அதிமுக இருந்தால்தான் திமுகவை வலுவோடு எதிர்க்க முடியும். வலிமையான எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என்பதாலேயே எடப்பாடியின் தலைமையில் அதிமுக செயல்படுகிறது.

மேலும் படிக்க | வெறிநாய் கடித்ததில் பார்வை இழந்த பள்ளி மாணவி - சோகம் !!

தேனி எம்.பி. ரவீந்திரநாத், தான் ஒரு அதிமுக எம்பி என்று அவரே கூறிக்கொள்கிறார். ஆனால், நாடாளுமன்றத்திலிருந்து இது தொடர்பாக எவ்வித பதிலும் வரவில்லை. ஓ.பி. ரவீந்திரநாத் அதிமுகவில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை. அவர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் சுயேச்சையான எம்பியாக இருக்கலாம். அதிமுக எம்பியாக இருந்த சமயத்திலேயே அவர் சுயேச்சை எம்பி போலத்தான் செயல்பட்டார். என்றைக்கும் அவர் அதிமுக கொள்கைகளுக்காகக் குரல் கொடுத்ததே இல்லை” என்றார்.

மேலும் படிக்க | மாட்டிறைச்சி விவகாரம் - இது திராவிட மாடலா இல்லை ஆரிய மாடலா?... சீமான் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

 

Trending News