'ஓ.பி.எஸ் பின்னால் மன்னார்குடி கம்பெனி' - அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி குற்றச்சாட்டு

Admk Veeramani Blames DMK : திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 20, 2022, 05:45 PM IST
  • எடப்பாடி வசம் வந்த திருப்பத்தூர் அதிமுக
  • ஒ.பி.எஸ்ஸும் விரைவில் வருவார் - கே.சி.வீரமணி
  • தலைவர்கள் உட்கட்சிப்பூசலால் உச்சக்கட்ட குழப்பம்
'ஓ.பி.எஸ் பின்னால் மன்னார்குடி கம்பெனி' - அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி குற்றச்சாட்டு title=

அதிமுகவிற்கு அடுத்த தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். 
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிற்கு ஆதரவாகவும், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் சார்பில்  வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை  அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுகவினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்,

மேலும் படிக்க | ஓ.பி.எஸ்-க்கு இத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவா? - வைத்திலிங்கம் பேட்டியால் பரபரப்பு!

இதில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் எனவும், எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் வணிக வரித்துறை மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் வீரமணி தலைமையில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரமணி பேசியதாவது, 

‘மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமிற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும் அதிமுகவை பிளவுபடுத்தி பார்க்க திமுக நினைக்கிறது. அதற்காக தொந்தரவு கொடுத்து பின்னிருந்து செயல்படுகிறது. அது ஒரு போதும் நடக்காது. கழக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒ.பன்னீர் செல்வமும் பழனிச்சாமியிற்கு ஆதரவு வழங்குவார். 

மேலும் தற்போது ஒற்றை தலைமையின் அவசியம் ஏற்பட்டுள்ளது. இரட்டை தலைமையில் இருந்தால் ஒருவருடைய முடிவு மற்றொருவர் ஏற்கமாட்டார். இது எதிரிகளுக்கு சாதகமாக இருக்கும். இதற்கு ஒற்றை தலைமைதான் அவசியம். மேலும் புகழேந்தியை கட்சியில் சேர்த்துக் கொண்டதன் மூலம், தொண்டர்களின் வெறுப்பை பெற்றுள்ளார் பன்னீர் செல்வம். அவரது மகனும் ஸ்டாலினை சந்தித்து திமுக நல்லாட்சி நடத்துகிறது எனக்கூறுகிறார்.    ஓ.பி.எஸ் எத்தனை உயர்மட்ட குழு அமைத்தாலும்  எடப்பாடியார்  தான் ஒரே தலைவர். மேலும் தமிழகத்தில் 99% சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிச்சாமியிற்குத் தான் ஆதரவு தெரிவிக்கின்றனர்’ என்று கூறினார். 

மேலும் படிக்க | பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைங்க : EPSக்கு OPS கடிதம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News