படுகொலையை செய்யப்பட்ட சிறுமிக்கு நியாயம் வேண்டி சேலத்தில் ஆர்ப்பாட்டம்: இரா.முத்தரசன்

சேலம் சிறுமியை கழுத்தை வெட்டித் துண்டாக்கி கொன்ற கொடூரன் தினேஷ்குமாரை கடுமையாக தண்டிக்க வேண்டும். சிறுமிக்கு நீதி கிடக்க வேண்டும் என கூறி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2018, 01:53 PM IST
படுகொலையை செய்யப்பட்ட சிறுமிக்கு நியாயம் வேண்டி சேலத்தில் ஆர்ப்பாட்டம்: இரா.முத்தரசன் title=

சேலம் சிறுமியை கழுத்தை வெட்டித் துண்டாக்கி கொன்ற கொடூரன் தினேஷ்குமாரை கடுமையாக தண்டிக்க வேண்டும். சிறுமிக்கு நீதி கிடக்க வேண்டும் என கூறி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் தலவாபட்டி ஊராட்சி, மடம் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலெட்சுமி மிகக் கோரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்த அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது தொடர்பாக தினேஷ்குமார் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொடிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்திடல் வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

கொலையாளிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து கைது செய்வதுடன், பாதிக்கப்பட்ட ராஜலெட்சுமி குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இக்கொடூரமான பாலியல் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் வரும் 09.11.2018 அன்று காலை 10 மணி அளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நியாயம் கேட்டு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தோழர்களும், பொது மக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News