#AIADMKGeneralCouncil : ஓராயிரம் தினகரன் வந்தாலும் அஇஅதிமுகவை அழிக்க முடியாது

Last Updated : Sep 12, 2017, 05:53 PM IST
#AIADMKGeneralCouncil : ஓராயிரம் தினகரன் வந்தாலும் அஇஅதிமுகவை அழிக்க முடியாது title=

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ம் தேதி ஒன்றாக இணைந்தன. 

இதற்கிடையே அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணியால் அதிமுக-வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

அப்பொழுது ஓராயிரம் தினகரன் வந்தாலும் அஇஅதிமுகவை அழிக்க முடியாது என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

இரட்டை இலை சின்னத்தை மீட்க நடவடிக்கை.

அதிமுக அணிகள் இணைந்ததற்கு பாராட்டு.

அணிகள் இணைந்த நிலையில் ஒரே கட்சியாக செயல்பட வேண்டும்.

அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தினகரனின் அறிவிப்பு எதுவும் செல்லாது.

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் அரசின் முடிவுக்கு நன்றி.

யார் யார் என்னென்ன பொறுப்புகளில் இருந்தார்களோ அந்த பதவிகளில் தொடரவும்.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி.

வார்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.

ஜெயலலிதா மணிமண்டபம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு பாராட்டு.

பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் ரத்து.

அதிமுகவில் இனி பொதுச்செயலர் பதவி கிடையாது.

ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Trending News