வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது 'இதை' கொண்டு போகாதீர்கள்

Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 19, 2024, 10:25 AM IST
  • காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
  • காலை 9 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 12.55% வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 15.10% வாக்குகள் பதிவாகி உள்ளன.
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது 'இதை' கொண்டு போகாதீர்கள் title=

Lok Sabha Election 2024: 18வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. 

அந்த வகையில், நாடு முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. இருப்பினும், ஒரு சில பகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் பழுதாக இருப்பதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது. லயோலா கல்லூரி 48வது வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரம் பழுது காரணமாக ஒருமணி நேரத்திற்கு மேலாக வாக்களிக்க வந்த மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இதேபோல், பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளதால் மக்கள் வாக்களிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு

இதற்கிடையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு,"அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடக்கிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவை சரி செய்யப்பட்டன. மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்து வருகின்றனர்" என்றார். 

மேலும் படிக்க | மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!

இருப்பினும், மற்ற பகுதிகளில் சீரான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணிவரை தமிழ்நாடு முழுவதும் 12.55% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பிரபலங்கள், தலைவர்கள் வாக்களிப்பு

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை. 6.40 மணிக்கே நடிகர் அஜித் குமார் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து, முதல் ஆளாக வாக்களித்துவிட்டுச் சென்றார். அதேபோல், சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் திண்டிவனத்தில் தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பிரேமலதா விஜயகாந்த், ரஜினிகாந்த், விழுப்புரம் திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

முதலமைச்சர் ஸ்டாலின் வாக்களிப்பு

குறிப்பாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்து வாக்களித்துவிட்டு சென்றனர். தொடர்ந்து, வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்கினை செலுத்த வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். 

"நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்குதான் வெற்றி" என செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி லாஸ்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்த யமஹா RX100 இருச்சக்கர வாகனத்தில் வருகை தந்து வாக்களித்துவிட்டுச் சென்றார். 

மொபைலுடன் வரும் வாக்காளர்களுக்கு அனுமதியில்லை...

இது ஒருபுறம் இருக்க, சென்னையில் பல இடங்களில் செல்போனுடன் வாக்காளர்கள், வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொபைலுடன் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்களிக்க எக்காரணம் கொண்டும் யாருக்கும் அனுமதி கிடையாது என அதிகாரிகள் கூறி வருகின்றனர். 

இதனால், கடும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தங்களிடம் பூத் சிலிப் கொடுக்கும்போதோ அல்லது வேறு இடங்களிலோ செல்போனுடன் வாக்களிக்க வரக்கூடாது என போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என தேர்தல் ஆணையம் மீது வாக்காளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கடுமையாக பின்பற்றப்படவில்லை என்றாலும் 

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பும், வாக்காளர்களின் கோரிக்கையும் 

சென்னையில் சில வாக்குச்சாவடிகளில் இந்த பிரச்னை எழுந்த நிலையில், உடனடியாக இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. செல்போனுடன் வாக்களிக்க வாக்காளர்களுக்கு அனுமதியில்லை என்பதால் செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வரும்படி தெரிவித்துள்ளது. இதுவும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது நீண்ட தூரம் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும்போது எப்படி செல்போனை வீட்டில் வைத்துவிட்டு வர முடியும் என்றும், வாக்குச்சாவடியிலேயே மொபைலை டோக்கன் கொடுத்து பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் படிக்க | வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News