காவிரியின் குறுக்கே மேகதாதில் அணைகட்ட மத்திய BJP அரசு அனுமதி வழங்கியது குறித்து அனைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!
காவிரியின் குறுக்கே மேகதாதில் 5912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டித் தண்ணீரைக் குடிநீருக்காக எடுக்கவும், நானூறு மெகாவாட் நீர்மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நேற்று இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, காவிரியின் குறுக்கே மேகதாதில் அணைகட்ட மத்திய BJP அரசு அனுமதி வழங்கியது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறிக்கே மேகதாதுவில் புதிய ஆணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய BJP அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 29-11-2018 அன்று (நாளை) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் "அனைத்துக்கட்சி கூட்டம்" நடைபெறும்’ என தெரிவித்துள்ளது.
‘காவிரியின் குறுக்கே #Mekedatu-வில் அணைகட்ட மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியது குறித்து அனைத்து கட்சிகள் கூட்டம்’
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு!
நாள்: 29-11-2018,
நேரம் – காலை 10:30 மணி,
சென்னை - அண்ணா அறிவாலயம். pic.twitter.com/6GT7LSDvZC— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) November 28, 2018