அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது

சட்டமன்றத் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 10, 2021, 11:15 AM IST
  • தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது.
  • அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
  • அடுத்தடுத்து வேட்பாளர்களின் அடுத்த பட்டியல்கள் வெளியிடப்படும் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது title=

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. சட்டமன்றத் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் (Assembly Elections) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியல் பின்வருமாறு:

1 ராசிபுரம் (தனி)(92) : திரு.S.அன்பழகன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கழக துணைத்தலைவர்

2 பாப்பிரெட்டிப்பட்டி (60) : திரு.P.பழனியப்பன்
முன்னாள் அமைச்சர்
கழக துணை பொதுச்செயலாளர்,
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

3 பாபநாசம் (172) : திரு.M.ரெங்கசாமி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக துணை பொதுச்செயலாளர்,
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்4 சைதாப்பேட்டை (23) : திரு.G.செந்தமிழன்
முன்னாள் அமைச்சர்
கழக துணைபொதுச்செயலாளர்
தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்

ALSO READ: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த்

5 ஸ்ரீரங்கம் (139) : திரு.R.மனோகரன்
முன்னாள் அரசு கொறடா
கழக பொருளாளர்,
திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர்
6 மடத்துக்குளம்(126) : திரு.C.சண்முகவேலு
முன்னாள் அமைச்சர்
கழக தலைமை நிலைய செயலாளர்,
திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்

7 திருப்பத்தூர்(சிவகங்கை)(185) : திரு.K.K.உமாதேவன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக தலைமை நிலைய செயலாளர்

8 சோளிங்கர்(39) : திரு.N.G. பார்த்திபன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக தேர்தல் பிரிவு செயலாளர்
ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர்

9 வீரபாண்டி(91) : வீரபாண்டி திரு.S.K. செல்வம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்,
சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

10 உசிலம்பட்டி(197) : திரு.I.மகேந்திரன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்,
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்

11 கோவை தெற்கு(120) : திரு.R.துரைசாமி (எ) சாலஞ்சர்துரை

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்
கோவை மேற்கு மாவட்ட கழக செயலாளர்

12 அரூர்(61) : அரூர் திரு.R.R.முருகன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்புச் செயலாளர்
கழக ஆட்சிமன்ற குழுத் தலைவர்

13 பொள்ளாச்சி(123) : திரு.K.சுகுமார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்,
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர்

14 தருமபுரி(59) : திரு.D.K.ராஜேந்திரன்
கழக அமைப்பு செயலாளர்,
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்

15 புவனகிரி(157) : திரு.K.S.K.பாலமுருகன்
கழக அமைப்பு செயலாளர்,
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்

அடுத்தடுத்து வேட்பாளர்களின் அடுத்த பட்டியல்கள் வெளியிடப்படும் என அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News