தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள பொறியியல் பாடங்களின் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வுகளை எழுத அனுமதி அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் கேள்விகள் அனைத்தும் நேரடி கேள்விகளாக இருக்காது என்றும், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு, சிந்தித்து விடையளிக்கும் வகையில் தான் வினாத்தாள் தயாரிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைகழகம் ( Anna Univesity) கூறியுள்ளது.
அதன் அடிப்படையில், கேள்விகளுக்கான விடையை எழுதும் போது சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து, அதைப் பற்றி அறிந்து கொண்டு விடை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதேபோன்று தேர்வின் போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ALSO READ | சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லை, 9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன: மத்திய அரசு
உள் மதிப்பீடுகளுக்கு (internal assessments) திறந்த புத்தக முறையிலான தேர்வு முறை பல முறை பயன்படுத்தப்பட்டாலும், இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கு பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று அண்ணாமலை பலக்லைகழகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், மாநிலத்தில் கொரோனா வைரஸின் (Corona Virus) தாக்கம் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டும் அம்ட்டும் இந்த முறை பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கும் இந்த முறையில் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து எடுக்கப்படும் முடிவு நிலுவையில் உள்ளது எனவும் கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் இது குறித்த முடிவு வெளியாகலாம்.
தேர்வின் முதல் பிரிவு, பகுதி A, மொத்தம் 10 மதிப்பெண்களுக்கானது, ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் இரண்டு மதிப்பெண்களுக்கான ஐந்து கேள்விகள் இருக்கும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரண்டாவது பகுதி, 40 மதிப்பெண்களுக்கானது, ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் எட்டு மதிப்பெண்கள் கொண்ட ஐந்து கேள்விகள் இருக்கும்.
ALSO READ | Price Update: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR