அரிவாள் யார் பிடித்தாலும் வெட்டும்... ஆர்எஸ் பாரதிக்கு அண்ணாமலை பதிலடி!

Annamalai Latest Speech: அரிவாள் யார் பிடித்தாலும் வெட்ட தான் செய்யும் எனவும் ஒரு கன்னத்தை அடித்தால் ஒரு கன்னத்தை காட்ட அரசியலுக்கு வரவில்லை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 7, 2023, 07:38 AM IST
  • திமுகவின் ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கும் வயதிற்கும் சம்பந்தமே இல்லை - அண்ணாமலை
  • மனித குலத்தின் மொத்த அழுக்கின் வடிகால் திமுக - அண்ணாமலை
  • எனக்கு பவர் பாலிடிக்ஸ் பண்ணும் எண்ணம் இல்லை - அண்ணாமலை
அரிவாள் யார் பிடித்தாலும் வெட்டும்... ஆர்எஸ் பாரதிக்கு அண்ணாமலை பதிலடி! title=

Annamalai Latest Speech: பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 123ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக, கோயம்புத்தூர் நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில், 'Rise of New India - ரைஸ் ஆஃப் நியூ இந்தியா' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,"சட்டப்பிரிவு 370 நீக்கப்பட வேண்டும் என தெரிவித்த மனிதர், ஷாம் பிரசாத் முகர்ஜி. அவரது 123 வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். எம்.பி., ரவீந்திரநாத் குமாரின் வழக்கு தீர்ப்பை படிக்கவில்லை. அதைப் பார்த்த பின்பு அதன் தகவலை தெரிவிக்கிறேன்.

ரூ. 397 கோடி ஊழல்?
 
அறப்போர் இயக்கம் டிரான்ஸ்பார்மம் வாங்கியதில் 397 கோடி ரூபாய் ஊழல் குறித்து தெரிவித்துள்ளனர். டெண்டர் எப்படி நடந்தது என தெரிவித்துள்ளனர், டெண்டர் பிக்சிங் நடந்துள்ளது. அறப்போர் இயக்கத்தின் செய்திக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். அறப்போர் இயக்கத்தின் புகாருக்கு விசாரணை செய்ய வேண்டும். முதல்வர் இதிலும் செந்தில் பாலாஜி போல காப்பாற்றப் போவாரா...? 

ஆளுநர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆளுநர் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார்.  திமுக இத்தனை காலம் நம்மை ஏமாற்றி உள்ளது. ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என்பதை வைத்து சாதகப்படுத்திக் கொள்கின்றனர். சிபிஐ ஒரிஜினல் பேப்பர் ஆகியவற்றை கொடுக்காத போது எப்படி ஆளுநர் செயல்படுவார்.

மேலும் படிக்க | ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

அரிவாள் யார் புடிச்சாலும்...

ஆர். எஸ். பாரதி பேசும் பேச்சுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. என்னுடைய தொண்டர்கள் அண்ணாமலையை பிரியாணி போட்டு விடுவார்கள் என அவர் தெரிவிக்கிறார். அரிவாள் யார் பிடித்தாலும் வெட்ட தான் செய்யும். நாம் விவசாயி வேறு, ஒரு கன்னத்தை அடித்தால் ஒரு கன்னத்தை காட்ட அரசியலுக்கு வரவில்லை. என்ன தலைகீழ நின்னு தோப்பு காரணம் போட்டாலும் 2024இல் 400 எம்பி பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவது உறுதி, தமிழகத்தில் 39 வருவது உறுதி. 

20% கமிஷன்

எலக்ட்ரானிக் எக்ஸ்போர்ட்டில் நம்பர் ஒன் தமிழ்நாடு என முதல்வர் விளம்பரம் அறிவித்தார். ஆப்பிள் உலக அளவில் ஏழு சதவீதம் எக்ஸ்போர்ட் இந்தியாவில் உள்ளது. முதல்வர் நம்பர் ஒன் என இவர் ஸ்டிக்கர் ஒட்டுகிறார். முதல்வரால் ஜப்பான், சிங்கப்பூர் சுத்தியே மூவாயிரம் கோடி ரூபாய் தான் கொண்டு வர முடிந்தது. ஒரு சதவீதம் கூட தமிழக அரசு இதற்கு காரணம் இல்லை. எலக்ட்ரிக் பைக் ஒசூரை சுற்றி செல்கின்றனர். தமிழகத்திற்குள் வர பயப்படுகின்றனர், காரணம் 20 சதவீத கமிஷன்.

யாரையும் பலவீனப்படுத்தி பாஜக வளராது. பாஜக கூட்டங்களுக்கு மக்கள் வர காரணம் மோடி மீது உள்ள மக்களின் நம்பிக்கை.  சுப்பிரமணியசாமி ஐயாவை இதுவரை பார்க்கவில்லை, பார்க்கப் போவதும் இல்லை யார் ஆசீர்வாதமும் எனக்கு தேவையில்லை. இது ஓல்ட் இந்தியா ஸ்டைல், அவர் நலமாக வாழ வேண்டும். ஆனால் கட்சியின் உழைப்பை மட்டுப்படுத்தினால் அண்ணாமலை ஏற்றுக் கொள்ள மாட்டான். அவர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

முத்துசாமி நம்பிக்கை உள்ளது

கோவையில் உள்ள தொழிலதிபர்களுக்கு இனியாவது சுதந்திரம் கிடைக்க வேண்டும். அண்ணாமலையை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் கோவையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கு கரண்ட் கட். தொழிலதிபரை பிரித்து உருட்டி மிரட்டுகின்றனர். முத்துசாமி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் கோவை வளர்ச்சிக்கு செயல்படுவார்.

டி.கே. சிவக்குமார் (கர்நாடக துணை முதல்வர்) பற்றி எனக்கு தெரியும். தேர்தல் அறிக்கையில் மேகதாது குறித்து போட்டார், இப்போது நாடகமாடுகிறார்கள். தமிழர் நலனில் கை வைத்தால் எந்த எல்லைக்கும் போவோம் என திமுக தெரிவிக்க வேண்டும்.

காவிரி நீரை கொண்டு வர வேண்டும்...

நான் தொண்டனாக பாராளுமன்றத் தேர்தலில் மாநில தலைவராக வேலை செய்வேன். என்னுடைய வேலை ஒருங்கிணைப்பு. நான் வந்திருப்பது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தான். எனக்கு பவர் பாலிடிக்ஸ் பண்ணும் எண்ணம் இல்லை. எங்கள் தலைமைக்கு தெரியும். 

இரண்டாவது ஊழல் பட்டியல் எனது நடைப்பயணம் தொடங்கும் முன்பு வெளியிடப்படும். கூட்டணி கட்சிகளோடு பயணம் செய்கிறோம், சுமூகமாக போகிறோம். பருவநிலை விவகாரத்தில் மாநில அரசு முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பாக இருக்க வேண்டும். காவிரி தண்ணீரையும் கொண்டு வர வேண்டும். 

வானதி அக்காவின் மீது தனிப்பட்ட முறையில் வன்மத்தை கக்குகிறார்கள். திமுகவிற்கு தெரிந்தது பெண்களை ஆபாசமாக பேசுவது. இதைப்பற்றி நானும் கவலைப்பட போவது கிடையாது. அவர்களும் கவலைப்பட போவது கிடையாது. மனித குலத்தின் மொத்த அழுக்கின் வடிகால் திமுக" என்று பேசினார்.

மேலும் படிக்க | ஆளுநர் நெனச்சா மந்திரி! இல்லன்னா எந்திரி : ஹெச்.ராஜா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News