பிப்.,17ஆம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையை பிப்.,17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்..!

Last Updated : Feb 14, 2020, 02:20 PM IST
பிப்.,17ஆம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு! title=

தமிழக சட்டப்பேரவையை பிப்.,17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்..!

சென்னை: தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். பட்ஜெட் தாக்கல் முடிவடைந்த பின் இன்றைய அலுவல்கள் முடிந்ததாக தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை துணை முதலவர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அவற்றில், தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74 கோடியே 8 லட்சம் ரூபாயும், போக்குவரத்து துறைக்கு 2 ஆயிரத்து 716 கோடியும், நெடுஞ்சாலைத்துறைக்கு 15 ஆயிரத்து 850 கோடியும், தமிழக காவல்துறைக்கு 8 ஆயிரத்து 876 கோடியும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 405.68 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் துறைக்கு 392.74 கோடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 18 ஆயிரத்து 540 கோடி, நீதி நிர்வாகத்துறைக்கு ஆயிரத்து 403 கோடி, வேளாண்துறைக்கு 11 ஆயிரத்து 894 கோடி, கால்நடைத்துறைக்கு 199 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆயிரத்து 306 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6 ஆயிரத்து 754 கோடி, தொழில்துறையை ஊக்குவிக்க 2500 கோடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு 607.62 கோடி, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 153 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு 281.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதேபோல் மீன்வளத்துறைக்கு 1229 கோடி, நீர்ப்பாசனத்துறைக்கு 6 ஆயிரத்து 991 கோடி, கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு 1224 கோடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு 218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், ஊரக வளர்ச்சித் துறைக்கு 23 ஆயிரத்து 161 கோடி, தொல்லியல் துறைக்கு 31 கோடியே 93 லட்சம், பள்ளிக் கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 181 கோடி, உயர்கல்வித் துறைக்கு 5 ஆயிரத்து 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, பட்ஜெட் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையை பிப்.,17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.  

 

Trending News