கடுப்பில் திமுக? இந்த முறையும் ஆளுநர் உரையில் பிரச்னையா? - தமிழக அரசியலில் சூழும் போர்மேகங்கள்

TN Governor Assembly Speech: கடந்தாண்டு சட்டப்பேரவை ஆளுநர் உரையின் போது பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், இந்தாண்டு ஆளுநர் எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்துகளை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 22, 2023, 01:09 PM IST
  • ஜனவரி மாதத்தில் சட்டப்பேரவை கூடும்.
  • பொன்முடி விவகாரத்தில் ஆளும் தரப்பு கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது
  • எனவே, இந்தாண்டும் பிரச்னை வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடுப்பில் திமுக? இந்த முறையும் ஆளுநர் உரையில் பிரச்னையா? - தமிழக அரசியலில் சூழும் போர்மேகங்கள் title=

TN Governor Assembly Speech 2024: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டபேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநரின் உரை முக்கியமானதாகும். ஆளுநரின் உரையில், மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தி வரும் விதம், அரசின் புதிய திட்டங்கள், புதிய கொள்கைகள் பற்றி அவர் உரை ஆற்றுவார், அதாவது சுமார் ஒரு மணிநேரம் ஆளுநர் உரை நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு சார்பில் எழுதி கொடுக்கப்பட்டதை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசிப்பார் தொடர்ந்து, அதன் தமிழாகத்தை சபாநாயகர் வாசிப்பார்.

மறக்க முடியாத 2023 ஆளுநர் உரை
 
ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு சார்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும். எதிர்கட்சித் தலைவரும் விவாதத்தில் பங்கேற்பார். கடைசி நாளில் முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு முதல்-அமைச்சர் பதிலளிப்பார். இப்படியிருக்க, கடந்தாண்டு ஆளுநர் உரை என்பது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது எனலாம். 

இந்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ரவி தமிழக அரசு கொடுத்த உரையில் சில பெயர் மற்றும் வாக்கியங்களை தவிர்த்தால் ஆளுநர் முன்னிலையிலேயே இதற்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததின் விளைவாக ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் படிக்க | பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம்...? நீதிபதியின் புதிய உத்தரவு என்ன...?

ஆளுநருக்கு மீண்டும் நெருக்கடி?

வரும் 2024ஆம் ஆண்டின் சட்டமன்ற முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை எப்படி இருக்கும் என தற்போதே விவாதம் கிளம்பியுள்ளது எனலாம். ஆளும் திமுக தரப்பில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானாவை போல ஆளுநரை முற்றிலுமாக புறக்கணிக்கலாம் என பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், பொன்முடிக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக ஆதரவாளர்கள் 2023ஆம் ஆண்டு சட்டமன்ற ஆளுநர் உரை நிகழ்வை வைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர், இதை குறிப்பிட்டுதான் திமுகவினர் இந்த முறையும் ஆளுநருக்கு நெருக்கடி அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது தொடுத்துள்ள வழக்கில் அரசிற்கு சாதகமாக இருக்கின்ற நிலையில், சட்டமன்றத்தில் ஆளுநரை புறகணித்தால் அது உச்சநீதிமன்றத்தில் ஏதும் பாதிப்பை ஏற்படுத்திவிட கூடாது எனவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தொடர்ந்து அரசு தரப்பிற்கு நிகராக வெள்ளம் குறித்த ஆலோசனை கூட்டம், பொன்முடி விவகாரங்கள் ஆளும் திமுக தரப்பை சற்று கோபமடைய செய்திருக்கிறது என கூறப்படுகிறது.  இதற்கெல்லாம் முன்னோட்டம் தான் தென் மாவட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆளுநர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மாநில அரசு சார்பாக யாரும் கலந்து கொள்ளாளதை சுட்டிக் காட்டுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மேலும் படிக்க | திமுகவின் அரசியலையே புரட்டி போடும் தீர்ப்பு! அண்ணாமலை கருத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News