தமிழக முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் தனது குடும்பத்துடன் 5 நாட்களுக்கு ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார். நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இங்கினார். அங்கிருந்து கார் மூலம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு வழியாக கொடைக்கானலுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மதுரை விமான நிலையத்திற்கு வரும்போது அங்கு பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டியன் என்பவர் மனு ஒன்று அளிப்பதற்கு முற்பட்டார்.
அந்த மனுவில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் போதை மற்றும் கஞ்சா பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், ஏழைத் தொழிலாளர்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் போதைப் பழக்கத்தில் இருந்து காத்திட வேண்டும் என்று’ குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாதா? தெளிவான தகவல் இல்லை என்று புகார்!
அது மட்டுமல்லாமல் அந்த மனுடன் சேர்த்து 8 கிராம அளவிலான கஞ்சா பொட்டலத்தையும் இணைத்து இருப்பதாகவும் மனுவில் குறுப்பிட்டிருந்தார். அந்த மனுவை கொடுக்க முயன்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை அவனியாபுரம் போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்பு நேற்று இரவு சங்கர பாண்டியன் மீது 294 b, 353, 506(ii) உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ