பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்வி - விசாரணைக்கு அரசு உத்தரவு

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டிருந்த விவகாரத்தில் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 15, 2022, 02:47 PM IST
  • பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தேர்வு நடந்தது
  • தேர்வில் சாதி குறித்து கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை
பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்வி - விசாரணைக்கு அரசு உத்தரவு title=

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகளை வரலாறு மாணவர்களுக்கு இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடந்தது. அந்தத் தேர்வில் தமிழ்நாட்டில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

இதனை மாணவர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

மேலும் படிக்க | கலைஞர், தளபதி வரிசையில்...சின்னவரா ? சின்னவனா ? - உதயநிதிக்கு சிக்கலாகும் பட்டப்பெயர்கள்!

சாதியை அழித்தொழிக்க வேண்டுமென்ற கொள்கையுடைய பெரியார் பெயரை கொண்ட பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்வியா எனவும் பலர் கேள்வி எழுப்பினர்.

Periyar University

தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இதுதொடர்பாக விளக்கமளிக்கையில்,  “தேர்வுக்கான வினாத்தாள் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டது இல்லை. பிற கல்லூரிகளில் தயாரிக்கப்பட்டது.

மேலும் படிக்க | மக்களவையில் பூஜ்ஜியமானது அதிமுக : ஓ.பி.ஆரை தூக்கிய இ.பி.எஸ் - இ.பி.எஸ்ஸை தூக்கிய ஓ.பி.எஸ்

அதுமட்டுமின்றி, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக அதனை முன்கூட்டியே படிக்கும் நடைமுறை கிடையாது. சர்ச்சைக்குரிய் கேள்வி குறித்து என் கவனத்துக்கு வரவில்லை. அதற்கான உரிய விசாரணை நடத்தப்படும்” என குறிப்பிட்டார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து விசாரிக்க உயர் அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

 

மேலும், இந்தக் குழு உரிய விசாரணையை நடத்தும். விசாரணையின் இறுதியில் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கை துறை ரீதியான நடவடிக்கையாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க | மிஸ்டர் ஹிட்லர் : மன்னராட்சியை கொண்டுவர துடிக்கிறீர்களா! - கமல்ஹாசன் காட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News