Pickpocket: காவல்துறையினரிடமே பிக்பாக்கெட் அடித்த சமூகவிரோதி...

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்திருந்த நபர் காவலரின் பாக்கெட்டில் கையைவிட்டு பிக்பாக்கெட் அடித்த சம்பவம் வைரல்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2022, 11:46 AM IST
Pickpocket: காவல்துறையினரிடமே பிக்பாக்கெட் அடித்த சமூகவிரோதி... title=

சேலம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் நேற்று முந்தினம் பாஜகவின் கட்சிக் கொடி கம்பம் நடுவது சம்மதமாக காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது கூட்டத்தின் பரபரப்பை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர் காவலரின் பாக்கெட்டிலிருந்து பிக்பாக்கெட் அடிப்பது காட்சிகளில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவினர், தங்களது கட்சிக் கொடி கம்பத்தை அந்த குறிப்பிட்ட இடத்தில் வைப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருந்தது.

கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் தள்ளுமுள்ளு சம்பவங்களும் அதிகமாக இருந்தது. அப்போது, எந்தவித பதட்டமும் இல்லாமல் மர்ம நபர் ஒருவர் காவலரின் பாக்கெட்டில் கையைவிட்டு பொருட்களை எடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது பிக்பாக்கெட் மற்றும் கொள்ளை அடிப்பது என முடிவு செய்து விட்டால் யாராக இருந்தாலென்ன? அவர்களுக்கு தேவை பணம் மற்றும் பொருள் தான் என்பதை இந்த திருட்டு சம்பவம் உணர்த்துகிறது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி போலீசாரிடம் இருந்தே, பிக்பாக்கெட் அடித்த கில்லாடி நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ | ஆளுநர் உரையுடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை: அதிமுக, விசிக வெளி நடப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News