விபத்து ஏற்படுத்துவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?: HC

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Last Updated : Jun 10, 2019, 01:58 PM IST
விபத்து ஏற்படுத்துவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?: HC  title=

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

சென்னை தாம்பரத்தில் தாறுமாறாக வந்த கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார். கவனக்குறைவாகவும் வாகனங்களை இயக்குவதால் ஏற்படுத்தும் விபத்துகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் வினவினார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.

வேகமாக வாகனத்தை இயக்கி மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனையை 2 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டப்பிரிவை அமல்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Trending News