சென்னை: அரசு ஆவணங்கள் மற்றும் படிவங்களில் தாயின் பெயரை குறிப்பிட தனிப்பிரிவு வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவின் மீது பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி அழைப்புகளில் தாயின் பெயரை சேர்க்கும்போது தமிழ்நாட்டு அரசின் ஆவணங்கள் மற்றும் படிவங்களில் தந்தை பெயர் மட்டும் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசின் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ராம்குமார் ஆதித்தன் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ALSO READ | திருச்சி அய்யப்பன் கோயிலில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு.!
மேலும் இன்று நடைபெற்ற மற்றொரு வழக்கில், தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதாவது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்கு தொகுப்பு நிதியும் உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மதிப்பீட்டாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என மனுதாரர் தெரிவித்தார்.
இதையடுத்து, கோவில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்ய ஏதுவாக, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில் அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ALSO READ | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - எதெற்கெல்லாம் தடைகள் ?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR