நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுப்பது தொடர்பான வழக்கை தமிழக காவல்துறையிடம் இருந்து வேறு விசாரணைக்கு மாற்ற உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது!
நங்கநல்லூரில் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து, பெரும் தொகைக்கு சிலர் விற்பனை செய்வதாக இளையராஜா என்பவர் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சென்னை காவல் ஆணையர் அறிக்கைத் தாக்கல் செய்தார். அதில் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் அப்பகுதியினரை மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் எடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், வருவாய் துறை, ஆர்.டி.ஒ, காவல்துறை, மாவட்ட ஆட்சியர் என அதிகாரம் கொண்ட யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யும் கும்பலுக்கும், உடந்தையாக பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் நடராஜன் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், நிலத்தடி நீர் எடுப்பவர்கள் தங்களை மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் கூறியதாகவும், காவல் நிலையத்தில் புகார் எடுப்பதில்லை என அவர்கள் குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. காவல் ஆணையரின் இந்த அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்கவில்லை, நீர் எடுத்து செல்பவர்களுக்கு காவல் ஆய்வாளர் உடந்தையாக இருந்துள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை, மக்கள் மிரட்டப்பட்டுள்ளனர் அதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.
வருவாய் துறை, ஆர் டி ஒ, காவல்துறை, மாவட்ட ஆட்சியர் என அதிகாரம் கொண்ட யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை சிபிஐ போன்ற வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்தனர். அரசு தரப்பில், காவல் ஆணையர் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் , காவல்துறை தரப்புக்கு கால அவகாசம் வழங்கி வழக்கை வரும் ஜூலை 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.