பட்டாசு ஆலை விபத்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்

திருநெல்வேலி மாவட்டம் வரகனூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர் குடும்பத்தக்கு நிதியுதவி அளித்த தமிழக முதல்வர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2019, 08:12 PM IST
பட்டாசு ஆலை விபத்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் title=

திருநெல்வேலி மாவட்டம் வரகனூர் அருகே நிகழ்ந்த செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் உலர வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெயிலின் தாக்கம் காரணமாக வெடிக்க ஆரம்பித்து மளமளவென தீ பரவ ஆரம்பித்தது. தொழிலாளர்கள் ஆலையத்தில் இருந்து வெளியே ஓடினார்கள். தீ அதிகமாக பிடித்ததால், கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது. 

இந்த விபத்தில் இதுவரை நான்கு பேர் பலியாகியுள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் நெல்லை வரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிச்சாமி நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். 

அதில் இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும், விபத்தில் கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Trending News