இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு கட்சி பொறுப்பிலிருந்து தனக்கு எதிராக இருக்கும் பலரை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து வந்தார்.
அவர்களுக்கு பதிலாக தனது ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் நியமிப்பதாகவும் அறிவித்தார். தினகரன் கட்சியிலேயே இல்லாத போது அவரின் நீக்கமும், புதிய உறுப்பினர்கள் நியமனமும் செல்லாது என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக இன்று தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதாக அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக எஸ்.கே.செல்வம் நியமிக்கப்படுவதாகவும், சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.