தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், இல்லத்தரசிகள், சிறு குறு தொழில் செய்பவர்கள் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி நாட்டின் எதிர்கால தூண்களான குழந்தைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதில் சிறந்து விளங்குகிறார். மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர் பெரியளவில் நன்மைகளை செய்து வருகிறார், தொண்டர்கள் கொண்டாடும் தலைவர் என்றல்லாமல் குழந்தைகள் கொண்டாடும் தலைவராகவும் விளங்குகிறார். இவரது கொள்கையை குழந்தைகள் ஏற்று செயல்படுத்தும் அளவிற்கு குழந்தைகள் மத்தியில் இவருக்கு மவுசு அதிகமுள்ளது. இலங்கையில் நடந்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து அனைவரும் அறிந்தது தான், ஒருவேளை உணவுக்கே மக்கள் எவ்வளவு பாடுபட்டு வருகிறார்கள் என்பதை நாம் பார்த்திருப்போம். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களுக்கு தமிழகம் சார்பாக அனைத்து உதவிகளும் செய்யபடும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
மேலும் படிக்க | HBD CM MKS: திராவிட நாயகன் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்! வாழ்த்துகள்!
தமிழக அரசு சார்பாக உதவி வழங்குவதோடு தமிழக மக்களும் ஈழத்தமிழர்களுக்காக உதவ முன்வர வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் வாகன ஓட்டுநர் ஷங்கர் இவரின் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் லஷ்மிபிரியா அவர் சேமித்து வைத்திருந்த தொகையிலிருந்து ரூ.3000-க்கான காசோலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் கொடுத்தார். மக்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றும் நிலையில் முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்றிய இந்த குழந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அடுத்ததாக மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றிய சம்பவம் அனைத்து மாணவர்களிடையேயும் முதல்வர் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், திப்பணம் பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்கள் பயிலும் வகையில் போதுமான கட்டிட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்கிற சிறுமி தங்கள் பள்ளிக்கு போதுமான இடம் வசதி செய்து தர வேண்டும் என கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் எங்கள் பள்ளியில் இடவசதி இல்லை, வகுப்பறைகளும் போதுமானதாக இல்லை, எங்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள ஏதுவாக விளையாட்டு மைதானங்களும் இந்த பள்ளியில் இல்லை. ஆறாவது படிக்க வேண்டுமென்றால் வெளியூருக்கு தான் செல்ல வேண்டும், எனக்கு எங்கள் ஊரில் படிக்க தான் ஆசை, அதனால் எங்க ஊரில் அரசுக்கு சொந்தமாகவுள்ள கோவில் இடத்தில மேல்நிலை பள்ளி கட்டி தாருங்கள் என்று அந்த சிறுமி தந்து கடிதத்தின் வாயிலாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
சிறுமியின் கடிதத்தை தொடர்ந்து உடனே தென்காசி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து, அந்த பள்ளிக்கு முதற்கட்டமாக சுமார் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டி தர உத்தரவிட்டு, மாணவியின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டும் தெரிவித்திருந்தார். தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வருக்கு, சிறுமி ஆராதனா நன்றி கடிதம் எழுதி அனுப்பினார். தனது கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி தெரிவித்து, முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத டாப் 10 தகவல்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ