கோவை நாடாளுமன்ற தொகுதி
மக்களவை தேர்தல் 2024 தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். ஸ்டார் தொகுதி என்பதால் கோவை மீது தேர்தல் தொடங்கியது முதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதிமுக, திமுக, பாஜக என மூன்று கட்சிகளிலும் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடத்தால் களத்தில் மும்முனை போட்டி நிலவியது.
வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு
தற்போது, கோவை நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் முடிவு அடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் Strong Roomல் வைக்கப்பட்டு அந்த அறை அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புகள் சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அங்கு வேட்பாளர்களின் முகவர்களும் உள்ளனர்.
மேலும் படிக்க | 'கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்...' அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் - இபிஎஸ் நறுக்
திடீரென சென்ற மர்ம கார்
Strong Room அருகே யாரும் செல்லக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், இன்று காலை தனியார் வாகனம் ஒன்று Strong Room அருகே சென்று நின்றுள்ளது. இதனைப் பார்த்த முகவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த கார் பணிபுரியும் பேராசிரியரின் கார் என தெரிய வந்தது. இந்தப் பகுதியில் யாரும் வரக்கூடாது, வேட்பாளர்கள் கூட அவர்களின் காரில் வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு இதனை அனுமதித்தார்கள்? என்று கூறி முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி முகவர்களை சமாதானப்படி காரை அனுப்பி வைத்தனர்.
வாக்கு எண்ணிக்கை
கோவை உள்ளிட்ட நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அதாவது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து 45 நாட்களுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் முதல் கட்ட தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில், இப்போது இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜூன் 1 ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அதனால், 45 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்களும் அங்கு இருப்பார்கள்.
மேலும் படிக்க | கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ