10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்

10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2024, 01:55 PM IST
  • கோவையில் நிலத்தை அபகரிக்க முயற்சி
  • தனியார் வங்கி மேலாளர் மீது புகார்
  • 10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் நிலத்தை விற்க முயற்சி
10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார் title=

கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரது மகன் மகாலிங்கம் (52). இவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில புகார் மனு ஒன்றை அளித்தார். அதில்  மகாலிங்கம் தனக்கு  சொந்தமான நேரு நகர் பகுதியில் உள்ள நிலத்தை தனுது நண்பர் மனோகரன் தொழில் செய்வதற்காக கேட்டு கொண்டதற்கிணங்க பத்திரத்தை வழங்கியதாகவும், அதனை மனோகரன் திருப்பூரில் உள்ள ஆந்திரா வங்கியில் மகாலிங்கத்தின் நிலத்தை அடமானம் வைத்து 85 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு - பின்னணி!

மேலும், வங்கிக்கு பணம் செலுத்தவில்லை என தொடர்ந்து நோட்டீஸ அனுப்பி வந்த  நிலையில், மகாலிங்கம் தன்னுடைய நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வங்கி அதிகாரிகள் கேட்ட ரு.90 லட்சம் பணத்தை பல்வேறு தவணை முறைகளில் வங்கியில் செலுத்தியாதாகவும்,  அதற்குப் பின்பும் 56 லட்சம் ரூபாயை தயார் செய்து திருப்பூர் ஆந்திரா வங்கியில் செலுத்தி தங்களது நிலம் தொடர்பான ஆவணத்தை எடுப்பதற்கு முயற்சி செய்த்தாகவும் கூறியுள்ளார்.

 இதனிடையே ஆந்திரா வங்கி மேலாளர்,  மதுரை பாபு என்பவரருடன் இணைந்து மோசடி செய்த்தோடு 10 லட்சம் பணம் கொடுத்தால் தனது நிலப்பத்திரங்களை தந்துவிடுவதாகவும், அதற்கு தான் மறுத்தாகவும் கூறியுள்ள மகாலிங்கத்தின் மனைவி மஞ்சுளா,  கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கு தங்களுக்கு சாதகமாக வந்த்தாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 9 5 2024 அன்று வங்கிக்கு உடனடியாக  தங்களது நில ஆவணத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு அனுப்பியதாகவும் கூறும் மஞ்சுளா,  உயர் நீதிமன்றம் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் அனுப்பிய உத்தரவு கடிதங்களை ஏற்காமல் மதுரை பாபு மற்றும் ஆந்திரா வங்கியின் மேலாளர் தொடர்ந்து தங்களை நிர்பந்தம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 

தற்போது டி.ஆர்.ஏ.டி நோட்டீசின் படி தங்களை வெளியேறுமாறு கூறியுள்ளதாகவும், இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகோண்டதோடு, தற்போது நீதிமன்ற விடுமுறை காலம் என்பதால் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இந்த புகார் குறித்து கோவை மாவட்ட காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | கோடை காலத்திலும் சளி பிடித்து மூக்கடைப்பா... குணப்படுத்த ஈஸி இதை செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News